தமிழ்நாடு

மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஊட்டி, மைசூர் மலைப் பாதையில் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.

தந்தி டிவி

ஊட்டி, மைசூர் மலைப் பாதையில் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. ஊட்டி, மைசூர் மலைப்பாதையில் முதுமலை புலிகள் சரணாலயம் மற்றும் பண்டிப்பூர் புலிகள் சரணாலயம் உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக வறட்சி நிலவியதால், அங்கிருந்து இடம் பெயர்ந்த வன விலங்குகள், தற்போது மழை பெய்து வருவதால், சரணாலயங்களுக்கு திரும்பி வருகின்றன. அவ்வாறு திரும்பும் யானைகள், ஊட்டி - மைசூர் மலைப் பாதையில் சுற்றி வருகின்றன.இந்நிலையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வேண்டும் எனவும் வனவிலங்குகளை இடையூறு செய்யும் வகையில், அவற்றின் அருகே சென்று புகைப்படங்கள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்