தமிழ்நாடு

"சென்னையால் தான் இங்கு வந்தோம்..." - வெயிலுக்கு சுற்றுலா பயணிகள் சொல்லும் ஐடியா

தந்தி டிவி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சியை காண, 3வது நாளான இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்த மலர் கண்காட்சியானது, கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை காண கடந்த 2 நாட்களில் மட்டும் 40 ஆயிரம் பேர் குவிந்துள்ளனர். ஒரு லட்சத்து 20 ஆயிரம் பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ள டிஸ்னி வேர்ல்ட் முகப்பு பகுதி, 80 ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மலை ரயில் ஆகியவை சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. மேலும், ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மூன்றாவது நாளாக அனைத்து ரக நாய் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இவற்றையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு, ரசித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்