"50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூல்" - நீதிமன்றத்தில் தகவல்
சென்னை மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையை சரி செய்தும், 50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்று, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டும் வசூலிக்க உத்தரவிட்டது.தொடர்ந்து இந்த உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வழக்கறிஞர், சாலை சீரமைப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும்,இருப்பினும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருவதாகவும் கூறியதோடு,வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இந்த மாத இறுதியில், வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவித்தது.