குமாரபாளையத்தில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்த லாரி ஓட்டுநர் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சடையம்பாளையத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான தமிழ்மணிக்கு, திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் கிரிக்கெட் போன்ற சூதாட்டத்தில் 75 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்த இவர், வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த வீடியோவில் அவர் குற்றம்சாட்டியுள்ள நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்மணியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.