தமிழ்நாடு

ஆன்லைன் வர்த்தகம் : தடை கோரி தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தந்தி டிவி

திருச்சி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,

ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் பல்வேறு வணிகர் சங்கத்தினர், வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 200 க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர். மத்திய மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அனைத்து வணிகர்கள் பொது நல சங்கம் சார்பில், மதுராந்தகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி அங்கு 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,

ஏராளமான வர்த்தகர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி, முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்