தமிழ்நாடு

2 அல்லது 3 நாட்களில் வெங்காயம் விலை குறையும் என தமிழக அரசு, ஆய்வு கூட்டத்திற்கு பின் தெரிவித்துள்ளது.

நாசிக், ஆந்திராவில் இருந்து வெங்காயம் வந்துகொண்டிருக்கிறது என்றும் 2 அல்லது 3 நாட்களில் வெங்காயம் விலை குறையும் என்றும் ஆய்வு கூட்டத்திற்கு பின் தமிழக அரசு அறிக்கை

தந்தி டிவி

வெங்காயம் வெளி சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு பொருள் சார்ந்த பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். மழையின் காரணமாக நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்த‌தன் காரணமாக அதன் விலை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காயம் அதிக அளவில் லாரிகளில் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெங்காயம் விலை குறையும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு