Erode | Onion Price | விண்ணை முட்டிய வெங்காயம் விலை | ஷாக்கில் மக்கள்
#Erode #Onion #Pricehike #punjaipuliampatti #thanthitv
புஞ்சை புளியம்பட்டியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.150க்கு விற்பனை ஈரோடு புஞ்சை புளியம்பட்டியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.150க்கு விற்பனை புஞ்சை புளியம்பட்டி சந்தையில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு கர்நாடகாவில் இருந்து சின்ன வெங்காய வரத்து குறைந்ததால் விலை உயர்வு தீபாவளி நெருங்குவதால் சின்ன வெங்காயம் தேவை அதிகரிப்பு சின்ன வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை. இல்லத்தரசிகள் அதிர்ச்சி.. வரத்து குறைவு மற்றும் தீபாவளி நெருங்குவதால் சின்ன வெங்காய விலை உயர்வு புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150 க்கு விற்பனையாவதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு,கோவை, நாமக்கல்,திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். இன்று கூடிய வார சந்தையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ150 வரையிலும் விற்பனையானது. விலை கடுமையாக உயர்ந்ததால் இல்லத்தரசிகள் சின்ன வெங்காயத்தை வாங்குவதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டது. அதே சமயம் பெரிய வெங்காயம் கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது. மழை இல்லாததால் சின்ன வெங்காய வரத்து குறைந்துள்ளதாலும், தீபாவளி நெருங்குவதால் சின்ன வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதனால் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 150 ரூபாயாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.