கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வெங்காய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி, காலை 8 மணியளவில் திம்பம் மலைப்பாதையில் 26-வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி , சாலையோரத்தில் உள்ள பாறையில் மோதி நகர முடியாமல் நின்றது. இதனால், இருபுறமும் வாகனங்கள் செல்ல வழியில்லாமல் அணிவகுத்து நிற்கின்றன. தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லாரியை கிரேன் மூலம் நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக அடிக்கடி திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் பழுது ஏற்பட்டு நிற்பதும், விபத்துக்கும் உள்ளாகி வருகின்றன. இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.