தமிழ்நாடு

யதேச்சையாக சோதனை போட்ட போலீஸ்.. ஆம்னிக்குள் அள்ள அள்ள கிடைத்த அதிர்ச்சி

தந்தி டிவி

ஆரணி அருகே ஆம்னி காரில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

களம்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை திண்பண்டங்களுக்கு இடையே மறைத்து கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, காரை ஓட்டிவந்த சிவக்குமார், சுரேஷ்பாபு இருவரை கைது செய்து, குடோனில் பதுக்கிவைத்து விற்பனை செய்துவந்த வடமாநில வியாபாரி பரத்குமாரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி கார் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்