சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, பல்வேறு நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் கழிவறைகளில் போதுமான தண்ணீர் வசதியில்லாததால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
குடிநீர் வசதியும் இல்லாததால், சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படும் கேன்டீன்களில் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும், அம்மா குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.