சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பண்ணப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், தண்ணீருக்காக, சமூக விலகல் மறந்து, கூட்டமாக கூடி காத்திருக்கின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.