ஓமலூரில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை மேள தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து சென்று மாணவ மாணவிகள் கவுரவித்தனர். பண்ணப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் மணிகண்டனுக்கு தமிழக அரசு சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இன்று பள்ளி திரும்பிய அவர், பண்ணப்பட்டி பிரிவில் இருந்து பள்ளி வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மாணவ மாணவிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து ஆசி பெற்றனர்.