தமிழ்நாடு

பயிர்க்கடனில் பலகோடி மோசடி செய்தவர்களை கைது செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறை - நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஓமலூர் அருகே பயிர்க்கடனில் பலகோடி மோசடி செய்தவர்களை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் தயங்குவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தந்தி டிவி

ஓமலூர் அருகே பயிர்க்கடன் வழங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் தயங்குவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள கணவாய்ப்புதூர் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன்கள் வழங்குவதில் 2 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விவசாயிகள் புகார் அளித்தனர். புகார் குறித்து விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து, அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர். ஆனால் அதன் பிறகு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் உயர்நீதிமன்றத்தை நாடியதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். முறைகேட்டில் தொடர்புடைய நான்கு பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் தயக்கம் காட்டுவதாக கணவாய்ப்புதூர் கிராம விவசாயிகள் குற்றம்சட்டியுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு