ஓமலூர் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடுபோகும் சம்பவம், தொடர் நிகழ்வாக அரங்கேறி வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பேருந்து நிலையம், கடை வீதி, தாலுகா அலுவலகம் மற்றும் வாரச் சந்தை உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 10 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடு போயுள்ளதாக கூறப்படுகிறது.