தமிழ்நாடு

Hosur | கர்ப்பிணி வேடத்தில் சென்று பிடித்த அதிகாரிகள்... மாட்டியதும் தலையில் அடித்து கதறிய நபர்

கர்ப்பிணி வேடத்தில் சென்று பிடித்த அதிகாரிகள்... மாட்டியதும் தலையில் அடித்து கதறிய நபர்

thanthitv

கர்ப்பிணி வேடத்தில் சென்று பிடித்த அதிகாரிகள்... மாட்டியதும் தலையில் அடித்து கதறிய நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை பகுதியில், சட்டவிரோதமாகக் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு வந்த எஸ்தர் மற்றும் குருமூர்த்தி ஆகிய இருவரை மருத்துவக் குழுவினர் கையும் களவுமாகப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ அலுவலர் கிரிஜா தலைமையிலான குழுவினர் திட்டமிட்டு நடத்திய சோதனையின் போது, கர்ப்பிணி வேடத்தில் சென்ற செவிலியர் ஒருவருக்கு ஸ்கேன் செய்தபோது இந்தச் சட்டவிரோத செயல் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ராயக்கோட்டை காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போச்சம்பள்ளியைச் சேர்ந்த எஸ்தர் மற்றும் திருப்பத்தூரைச் சேர்ந்த குருமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து அதிநவீன ஸ்கேன் இயந்திரம் மற்றும் தடை செய்யப்பட்ட ஏராளமான மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Murugan Statue | மீண்டு வந்த நடுபழனி மரகத பாலமுருகன்

TVK Complaint``ஆ.ராசா மேல் சட்டப்படி நடவடிக்கை’’ - போலீஸுக்கு சென்றது.. ஷாக் கொடுத்த தவெக தரப்பு

NTK Candidates இடைத்தேர்தல் வேட்பாளர்களை களமிறக்கினார் சீமான் - யார் யார் தெரியுமா..?

BREAKING || வெற்றிகரமாக முடிந்த பிரிக்ஸ் மாநாடு - உலகை புருவம் உயர்த்த வைத்த `டெல்லி பிரகடனம்’

Vinayagarchaturthi | சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு `க்ரீன் சிக்னல்'..வெளியான அதிரடி அறிவிப்புகள்