தமிழ்நாடு

அரிசி ஆலைக்கு அனுமதி தர லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் அரிசி ஆலைக்கு அனுமதி தர லஞ்சம் பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டத்தில் அரிசி ஆலைக்கு அனுமதி தர லஞ்சம் பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார். திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜகோபால், அரிசி ஆலை அமைக்க வரைபட அனுமதிக்காக பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இதனை பரிசீலித்த செயல் அலுவலர் ஜானகிராமன் அரிசி ஆலைக்கு அனுமதி வழங்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சிவபாதசேகரிடம் ராஜகோபால் புகார் செய்தார். அதன் அடிப்படையில், பேருராட்சி செயல் அலுவலர் ஜானகிராமன், அவரது உதவியாளர் பரந்தாமன் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்