தமிழ்நாடு

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை - நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை - நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

தந்தி டிவி

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை - நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமாக எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைப்பெற்றது.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அ.தி.மு.க உட்கட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் இந்த கூட்த்தில் ஆலோசித்த‌தாகவும், அ.தி.மு.க.வில் உள்ள வழிகாட்டு குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ச‌சிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அன்வர் ராஜாவுக்கு கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்த‌தாகவும், இதையடுத்து அன்வர் ராஜா மன்னிப்பு கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றதாகவும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்ட தாகவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றதாக தெரிவித்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மாவட்ட செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்தனர். - ஜெயக்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர்

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்