மருத்துவ படிப்பில் தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக அரசு தரப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி வாதிடப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை 26-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தீர்ப்பில் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி உள்ளது.