புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர கால சிறப்பு சிகிச்சை பிரிவு மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த மூன்று மாதங்களில் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு வீதம் 8 புள்ளி 3 சதவீதத்தில் இருந்து 5 புள்ளி 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.