தமிழ்நாடு

பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.

தந்தி டிவி

கல்வியாண்டில் நடந்த முடிந்த 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்கள் பெயர் பட்டியலை தேர்வுத்துறை தயாரித்தது.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரைத்தது.இதனை தொடர்ந்து ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்த பள்ளி கல்வித்துறை விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளது.இதில் 70 சதவீதம் ஆசிரியர்கள் விளக்கம் அளித்துவிட்டதாகவும், எஞ்சிய 30 சதவீதம் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.தவறும் பட்சத்தில் அந்த ஆசிரியர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதேபோல், பொதுத்தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்ட 10,11, 12 ஆகிய வகுப்புகளை சேர்ந்த 310 மாணவர்களிடம் விசாரணை முடிந்ததை தொடர்ந்து,அவர்கள் 2 பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்