தமிழ்நாடு

North Indian | அரசு கட்டிடம் வடமாநிலத்தவர் தங்குமிடமாக மாற்றம்?

North Indian | அரசு கட்டிடம் வடமாநிலத்தவர் தங்குமிடமாக மாற்றம்?

thanthitv

அரசு கட்டிடம் வடமாநிலத்தவர் தங்குமிடமாக மாற்றம்? திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி வில்வாதம்பட்டி ஊராட்சியில் பராமரிக்கப்படாத அரசு கட்டிடம் வடமாநிலத் தொழிலாளர்களின் தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில் சுமார் 13 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த கட்டிடம் வடமாநிலத் தொழிலாளர்களின் தங்குமிடமாக பயன்படுத்தப்படுவதாகவும், அரசு கட்டிடங்களை உரிய நோக்கத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை