தமிழ்நாடு

3 ஆண்டுகளாக வீடு இல்லாமல் தவித்த குடும்பம்...கழிப்பறையில் வசித்து வந்த சோகம்

தந்தி டிவி

வந்தவாசி அருகே வீடு இல்லாத ஒரு குடும்பம் அரசு பொது கழிவறையில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் அவல நிலை தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சளூக்கை கிராமத்தை சேர்ந்த தினகரன்-பொன்னியம்மாள் தம்பதிக்கு 7 மாத குழந்தை ஒன்று உள்ளது. கூலி வேலை செய்து வரும் இவர்கள் அரசு தொகுப்பு வீடு கேட்டு பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். அனால், வீடு கிடைக்காததால் அரசு பொது கழிவறை கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தகவல் அறிந்து நேரில் வந்த வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், அவர்களுக்கு ஜன்மன் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் என்று உறுதியளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்