விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாளை மழை பெய்தால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மாதம் தோறும், அமாவாசை, பெளர்ணமிக்கு 4 நாட்கள் வீதம் மொத்தம் 8 நாட்கள் மட்டுமே, சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், நாளை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மழை பெய்தால், கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.