தமிழ்நாடு

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை இல்லை - கேரள அரசு உத்தரவாதம்

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

தந்தி டிவி

* முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்ததை எதிர்த்த மனு மற்றும்,உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய மத்திய அரசு, கேரள அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு உள்ளிட்டவை மீதான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

* அப்போது, ஆய்வறிக்கை தயாரிக்க தரவுகளை திரட்டும் பணி மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அணை கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் கேரள அரசு சார்பில் தெரிவிக்கபட்டது.

* இதனையடுத்து, மத்திய அரசு கேரளாவிற்கு, விரிவான திட்ட ஆய்வறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

* அதனைதொடர்ந்து, தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மாட்டோம் என்று கேரள அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்