தமிழ்நாடு

"மீனவர்கள் யாருக்கும் மண்ணெண்ணெய் மானியம் மறுக்கப்படவில்லை" - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

தந்தி டிவி

மீனவர்கள் யாருக்கும் மண்ணெண்ணெய் மானியம் மறுக்கப்படவில்லை என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பாடி மேம்பாலம் அருகே, வண்ண மீன்கள் விற்பனை வர்த்தக மையத் கட்டிடத்தின் கட்டுமானப் பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, கூடங்குளம் அருகே தவெக கொடியின் வண்ணம் பூசியிருந்த படகுகளுக்கு மண்ணெண்ணெய் மறுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அரசு நிர்ணயித்துள்ள வண்ணத்திற்கு பதில் வேறு வண்ணம் பூசப்பட்டிருந்த படகுகளுக்கு மட்டுமே மானியம் மறுக்கப்பட்டது என்றும், அவர்களும் சரியான வண்ணத்தை பூசியதால் மானியம் வழங்கப்பட்டு விட்டது என்றும் அவர் பதில் அளித்தார்.

India`s First Bullet Train | கடலுக்கு அடியில் பயணம் செய்யும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்

Uttarakhand | கண்ணிமைக்கும் நொடியில் பயங்கரம்.. தடம்புரண்டு சுவரை உடைத்து விழுந்த ரயில்

#BREAKING || PetrolDieselPriceHike | இடியாய் இறங்கிய செய்தி.. மீண்டும் எகிறிய பெட்ரோல், டீசல் விலை

AIADMK |EPS | "அட்டாக் Mode.. புது ஸ்டாண்ட் எடுத்த EPS.." பின்னணி சொல்லும் சஞ்சீவி

BREAKING || "வேதனையான உண்மை" - பரபரப்பான அரசியல் சூழலில் புயலை கிளப்பிய ஈபிஎஸ் அறிக்கை