தமிழ்நாடு

ஐகோர்ட் உத்தரவை இன்றே நிறைவேற்றும் NLC

தந்தி டிவி

நீதிமன்ற உத்தரவின்படி, விளை நிலங்களுக்கான இழப்​பீட்டு காசோலையை இன்று முதல் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்எல்சி இந்தியா நிறுவனம் பரவனாறு மாற்று பாதை அமைக்கும் பணியில் உள்ள விளைநிலங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. என்எல்சி நிறுவனம் ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் காசோலைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியிருந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏக்கருக்கு மேலும் 10 ஆயிரம் என்ற அளவில் காசோலைகளை வழங்கியுள்ளது. சிறப்புத் துணை ஆட்சியர் நிலம் கையகப்படுத்துதல் பிரிவில் இந்த காசோலைகள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, இன்று முதல் விவசாயிகள் அந்த காசோலைகளை பெற்று கொள்ளலாம் என என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.NLC will implement the court order today

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை