தமிழ்நாடு

விசாரணைக்கு வரும் NLC விவகாரம்- இரவு-பகலாக தொடரும் பணிகள்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே, என்.எல்.சி. நிறுவனம் இரவு-பகலாக கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில், நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. விளைநிலங்களை அழித்து கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையும் மீறி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பரவனாறு வடிகால் கால்வாய் அமைக்கும் பணி 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக இரவு-பகலாக இப்பணிகள் நடைபெறும் நிலையில், இரவு நேரத்தில் பணிகள் நடைபெறும்போது வயல்வெளிகள் அழிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, உயர்நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் இப்பணிகளை முடிக்க என்.எல்.சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு