தமிழ்நாடு

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெய்வேலி என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த செய்திக்கேட்டு மனவேதனையடைந்ததாக கூறியுள்ளார். இந்த விபத்தில் காயம் அடைந்த 17 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC