என்எல்சி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம், வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சியில் நிரந்தர வேலை வழங்க என்எல்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. முன்னதாக, நேற்று என்எல்சி சேர்மன் ராகேஷ் குமார் உடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால் உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.