தமிழ்நாடு

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து 6 பேர் உயிரிழந்த விபத்து - நிவாரணம் வழங்கி அமைச்சர் எம்.சி. சம்பத் ஆறுதல்

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரிடம் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண காசோலை வழங்கப்பட்டது.

தந்தி டிவி
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரிடம் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண காசோலை வழங்கப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி நடந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 17 பேர், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்த, என்.எல்.சி. தொழிலாளர்கள், சிலம்பரசன், வெங்கடேசபெருமாள், பத்மநாபன், அருண்குமார், நாகராஜன், ராமநாதன் ஆகிய 6 பேருக்கும், முதலமைச்சர் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்