தமிழ்நாடு

என்எல்சி கொதிகலன் வெடித்த விபத்து - இன்று மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு

நெய்வேலி என்.எல்.சியில் கொதிகலன் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் இறந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

என்எல்சி 2-வது அனல்மின் நிலையத்தின் ஐந்தாவது அலகில், கடந்த வாரம், கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஏற்கனவே, 12 பேர் இறந்த நிலையில், இன்று மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை கொடுப்பதாக என்.எல்.சி நிர்வாகம் உறுதி அளித்திருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களுக்கும் இது பொருந்தும் என ஏற்கனவே அந்த நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி