தமிழ்நாடு

மீம்ஸ் போடுற மாம்ஸ்களுக்கு நித்தி அட்வைஸ்

மீம்ஸ் போடுற மாம்ஸ்களுக்கு நித்தி அட்வைஸ் அளித்திருக்கிறார்

தந்தி டிவி

சமூக வலைத்தளமே நித்தியின் பேச்சால் கலகலப்பாகி இருக்கிறது. தினம் அவர் என்ன பேசுவார்? என ஆர்வமாக தெரிந்து கொள்வதற்காகவே யூட்யூபில் சரியாக 9 மணிக்கு ஆஜராகும் ஆட்களும் அதிகம்.

சூரியனே என் பேச்சுக்கு கீழ்படிந்தது, மேகக் கூட்டம் என் உத்தரவிற்கு கட்டுப்பட்டது என பட்டையை கிளப்பும் நித்தியின் பேச்சு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெரும் தீனியாகவே உள்ளது.

எந்த பக்கம் திரும்பினாலும் கைலாசாவும், நித்தியும் நிறைந்திருக்க நித்தியின் பேச்சோ மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாகவே அமைந்தது.

தான் சொல்வதை அலட்சியப்படுத்தாமல் கேளுங்கள் என கூறும் நித்தி, வாழ்க்கையின் அடிப்படையே மகிழ்ச்சியான சூழல் தான் என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.

என்ன செய்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்களோ.. யாருடன் இருந்தால் உங்களுக்கு இன்பம் என நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள் என்பதும் நித்தியின் அறிவுரை...

புராணம், சித்தர்கள், கதைகள் என எல்லாவற்றிலும் மேற்கோள் காட்டி பேசும் நித்தி உறவு முறைகள் பற்றியும் சமீப காலமாக பேசி வருகிறார். எல்லாம் சரி தான். நான் யார்? என விரிவாக பேசும் நித்தி, எங்கே இருக்கிறேன் என்பதை சொல்வாரா?

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி