தமிழ்நாடு

Madurai Tanisq Robbery Update| `டீயால்’ விழுந்த நிஷாந்த்.. மீனாட்சி அம்மா பக்கம் திரும்பிய போலீஸ்

`டீயால்’ விழுந்த நிஷாந்த்.. மீனாட்சி அம்மா பக்கம் திரும்பிய போலீஸ்

thanthitv

`டீயால்’ விழுந்த நிஷாந்த்.. மொத்தத்தையும் கக்கினார் - மீனாட்சி அம்மா பக்கம் திரும்பிய போலீஸ்.. அவரும் இன்ஃப்ளூயன்சரா #maduraitanisqrobbery #tanisqrobbery #youtubermeenakshi #youtubernishant மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் 5 நாட்களாகத் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நிஷாந்த், தர்மபுரியில் ஆம்னி பேருந்தில் பயணித்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார். மதுரை தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் அவரது தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வழக்கின் முக்கிய நபரான நிஷாந்தை கடந்த ஐந்து நாட்களாகத் தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இருசக்கர வாகனம், வாடகைக் கார், பேருந்து என மாறி மாறிப் பயணித்து அவர் தப்பித்து வந்துள்ளார். சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதற்கிடையே, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் நிஷாந்த் பயணித்துள்ளார். அவரது நடமாட்டத்தில் சந்தேகமடைந்த பேருந்து ஓட்டுநர், அதியமான்கோட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள சேசம்பட்டி பகுதியில், டீ குடிப்பதற்காக நிறுத்துவதுபோல் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். இதையடுத்து, சேசம்பட்டி அருகே காத்திருந்த அதியமான்கோட்டை காவல்துறையினர், நள்ளிரவில் பேருந்தை நிறுத்திச் சோதனையிட முயன்றனர். அப்போது போலீசாரைக் கண்ட நிஷாந்த், ஜன்னல் வழியாகத் தப்ப முயன்றுள்ளார். இருப்பினும், அவரைச் சுற்றிவளைத்த போலீசார் கைது செய்தனர் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், மதுரை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரனுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தர்மபுரி சென்ற மதுரை தனிப்படை போலீசாரிடம் நிஷாந்த் ஒப்படைக்கப்பட்டார். 10 மணி நேர விசாரணைக்குப் பின் முகத்தை மூடி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிஷாந்த் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டார். விளாச்சேரி கோபாலிபுரம் மலை அடிவாரத்தில் நிஷாந்த் பதுக்கி வைத்திருந்த சுமார் 6 கிலோ நகைகளை போலீசார் மீட்டனர். ’ மீனாட்சி அடையாளம் காட்டிய இடத்தில் மீட்கப்பட்டதுடன் சேர்த்து, மொத்தமாக 11 புள்ளி 7 கிலோ நகைகள் முழுவதுமாக மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறுபுறம், ஏற்கனவே கைதான யூடியூபர் மீனாட்சியின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், மீனாட்சியின் தாயாரும் இன்ஸ்டா இன்புளுயன்சருமான சிந்துவிடம் விசாரணை நடத்தினர்.

Periyar Arivulagam | பெரியார் அறிவுலகம் முறைகேடு.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்

Akwan Cyclone| இன்று மாலையே உக்கிரமாக மாறும் அசுரன் புயல்.. ஆரஞ்சு அலர்ட் விடுப்பு

Tanishq | மதுரை தனிஷ்க் கொள்ளை வழக்கு.. நீதிபதி முன் நிறுத்தப்பட்ட நிஷாந்த்

Gem Veeramani Case Update| ஜெம் வீரமணி வழக்கில் எதிர்பாரா ஷாக்.. SRMU கண்ணையாவை துருவும் SIT

Madurai Tanishq | தனிஷ்க் கொள்ளை விவகாரம்.. நிஷாந்துக்கு முக்கிய பரிசோதனை