தமிழ்நாடு

மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம்...

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்தது தொடர்பான வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தந்தி டிவி

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி லாவண்யா தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிர்மலாதேவியின் பேச்சுக்களை சிடிகளாக மாற்றியுள்ளதாகவும், 160 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதான முருகன் மற்றும் கருப்பசாமிக்காகவே மாணவிகளிடம் பேசியதாக பேராசிரியை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 3 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி, சிம் கார்டு, மெமரி கார்டு, லேப்டாப் உள்ளிட்ட 123 முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட, நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு பரிந்துரைத்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்