தமிழ்நாடு

"கடல் சார் ஆய்வுகளில் தமிழகம் முன்னோடி" - வெங்கையா நாயுடு

நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடல் நீரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் நடைபெற்ற தேசிய கடல்சார் தொழில் நுட்ப கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், சுற்றுச்சூழல் கள ஆராய்ச்சியில், கடற் சார்ந்த ஆய்வுகள் முக்கியமானவை என்று தெரிவித்தார். கடல் சார்ந்த ஆய்வுகளில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாகவும், சோழர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள் நாடு கடந்து வாணிபம் செய்து சாதனை படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடல் நீரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு கூறினார். இயற்கையோடும் கலாச்சாரத்தோடும் சேர்ந்து உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தேவையான தொழில்நூட்பங்கள் உருவாக்கிட வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்