தமிழ்நாடு

சாலை மற்றும் சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் நிலோபர் கபில் தகவல்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கூட்டம் சென்னை செனாய் நகரில் நடைபெற்றது.

தந்தி டிவி

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கூட்டம் சென்னை செனாய் நகரில் நடைபெற்றது. குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளோடு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் பரிசு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. குழந்தை தொழிலாளர் முறையை தடுக்க, சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சாலை ஓரங்களில், போக்குவரத்து சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்