#Nilgiris #Butterfly #NilgirisLandslide #TNRains #ThanthiTV
Nilgiris Landslide | நிலச்சரிவுக்கு பிறகு நீலகிரியில் மாறிய காட்சி - கலர் கலராக படையெடுத்த வண்ணத்துப்பூச்சிகள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில், வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் சாலை முழுவதும் வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் தென்படுகின்றன. கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், குன்னூர் பர்லியார் பகுதியில் அதிகபட்சமாக 25 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால், 14-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து இல்லாததால் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்வது காண்போரை கவர்ந்து வருகிறது.