நீலகிரி மாவட்டம் , முதுமலை சரணாலயத்தில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அப்போது விழா மேடை அருகே செல்லும் போது, தூரத்தில் நின்று கொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தமது காலணிகளை கழற்றுமாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.