தமிழ்நாடு

தொடர் மழை எதிரொலி : "நிலச்சரிவை சீரமைக்கும் பணி தீவிரம்" - ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா

நீலகிரியில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நீலகிரியில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர்கால அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலைகளை சீர் செய்ததாக கூறினார். மேலும், மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக ஆட்சியர் தெரிவித்தார். குந்தா, கிளென்மார்கன், பைக்காரா அணைக்கட்டுகள் முழு கொள்ளளவை எட்டியதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ள முகாம்களில் தங்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்