தமிழ்நாடு

நீலகிரியில் தொடரும் கனமழை : மாயார் அருவிக்கு செல்ல வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்

நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மாயார் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மாயார் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, ஊட்டி உள்ளிட்ட பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. முழு கொள்ளவை எட்டியுள்ளதால், பைகாரா அணைக்கட்டில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், மசினகுடி, மாயார், தெப்பக்காடு, தெங்கமராட்டா ஆகிய பகுதிகளில் கரையோரம் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாயார் நீர்வீழ்ச்சிக்கு, மீன்பிடிக்கவோ, குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ மக்கள் செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கேட்டுகொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்