நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல்நேரங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் இரவில் குடியிருப்பு மற்றும் சாலையில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோத்தகிரி கேசலாடா கிராமத்திற்கு செல்லும் சாலையில் இரவில் கரடி உலா வந்ததை கண்ட வாகன ஒட்டிகள் அச்சம் அடைந்தனர். வனத்துறையினர் கரடியை கண்காணித்து வேறு பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.