அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்தன. சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. இதனால் நியூயார்க்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெள்ளம் சூழ்ந்து அவை சேதத்தை சந்தித்தன. பேருந்து படிக்கட்டு வாயிலாக உள்ளே தண்ணீர் புகுந்ததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.