கொரோனா நோய் தடுப்பு பணிக்காக, மேலும் 2 ஆயிரத்து 570 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நியமன ஆணை கிடைத்தவுடன் மூன்று தினங்களுக்கு பணியில் சேர வேண்டும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்கள், தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என செய்திகுறிப்பில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.