விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 அதிநவீன குளிர்சாதன அரசு பேருந்துகளை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார். இந்த பேருந்து விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு, 180 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்பட உள்ளது. இதில் புஷ்பேக் சீட், அறிவிப்புகளுக்காக மைக் மற்றும் 6 ஸ்பீக்கர்கள், குளிர்சாதன வசதியை மாற்றியமைக்கும் வசதி, இருக்கைகளில் செல்போன் சார்ஜர், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.