தமிழ்நாடு

"விழுப்புரம் மாவட்டத்துடன் இணையுங்கள்" : 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள கறிவேப்பிலைபாளையம், காந்தலவாடி, மடப்பட்டு பெரியசெவலை, சரவணப்பாக்கம், கொளத்தூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் விழுப்புரத்திற்கு மிக அருகில் உள்ளதால், அவற்றை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே தங்கள் கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக,

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், கண்ணில் கருப்பு துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்