தமிழ்நாடு

"நாகையை இரண்டாக பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும்" - முதலமைச்சர்

நாகையை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

தந்தி டிவி

* பணிக்காலத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ நிதி உதவி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

* ஆதிதிராவிடர் நல விடுதி பள்ளி மாணவர்களுக்கான உணவுத் தொகை 900 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாகவும்,கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து 100 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

* திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மருந்தியல் தொழிற்பூங்கா, சிப்காட் நிறுவனத்தால் 770 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அவர் அறிவித்தார்.

* சானடோரியம், தாம்பரம், மதுரை மாவட்டம் தோப்பூர், கோவை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி உள்ளிட்ட மருத்துவமனைகள் பயோ சேப்டி லெவல் 3 நிலைக்கு மேம்படுத்த 110 கோடி செலவிடப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

* வான்வழி அவசர கால சேவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும்,

* தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ள மணிமண்டபத்தில், வெள்ளையத்தேவனுக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்படும் என அவர் அறிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்