தமிழ்நாடு

இ-பதிவு முறையில் புதிய நிபந்தனை... திருமணத்திற்கு பதிவு செய்வது எப்படி?

திருமணத்திற்கான இ-பதிவு முறையில், புதிய நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.திருமண நிகழ்விற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இ-பதிவு முறையில் புதிய நிபந்தனை... திருமணத்திற்கு பதிவு செய்வது எப்படி?

திருமணத்திற்கான இ-பதிவு முறையில், புதிய நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.திருமண நிகழ்விற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பதிவிலேயே அனைத்து வாகனங்களுக்கும், இ-பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது.மணமகள், மணமகன், தாய், தந்தை உள்ளிட்டவர்களில், ஒருவர் மட்டுமே இப்பதிவை மேற்கொள்ளலாம் என்றும்,விண்ணப்பதாரர் பெயர் திருமண அழைப்பிதழில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தவறான தகவல் தந்திருந்தாலும் ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ- பதிவு செய்திருந்தாலும் சிவில் மற்றும் கிரிமினல் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண், அதில் பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயர், ஆதார், ரேஷன் ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஒரு அரசாங்க அடையாள அட்டையை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், விண்ணப்பித்தவர் பெயர், திருமணம் நடைபெறும் நாள், திருமணம் நடைபெறும் இடத்தின் முகவரி, திருமணம் நடைபெறும் இடம் அமைந்துள்ள மாவட்டம், திருமணம் நடைபெறும் இடத்தின் அஞ்சல் குறியீடு,மொத்த விருந்தினர் எண்ணிக்கை, விண்ணப்பதாரரின் அடையாள சான்று, உள்ளிட்டவற்றையும் பதிவேற்றம் செய்தால் திருமணத்திற்கு செல்வதற்கான இ - பதிவு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி