தமிழ்நாடு

புதிய வகை நாட்டுக்கோழிகள் உருவாக்கம் - கருப்பு வண்ண கடகநாத் கோழிக்கு மவுசு அதிகரிப்பு

இறைச்சி பிரியர்கள் மத்தியில், நாட்டு கோழிகளுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதன் காரணமாக மூன்று வகையான புதிய நாட்டுகோழி இனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

பல ஆண்டுகளாக பிராய்லர் வகை கோழி இறைச்சியை

ருசித்த மக்களுக்கு, தற்போது நாட்டுக்கோழி இறைச்சி மீது ஆர்வம் திரும்பியிருக்கிறது. இதன்விலை சற்று கூடுதல் என்றாலும், வாங்குவதற்கு இறைச்சி பிரியர்கள் தயங்குவதில்லை. நாட்டுக்கோழிகளுக்கு இருக்கும் வரவேற்பு எதிரொலியாக, மரபணு மாற்றம் மூலம், புதிய நாட்டுக்கோழிகளை உருவாக்கும் முயற்சியில், சென்னை மாதவரத்தில் உள்ள கோழியின ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டுள்ளது.அங்கு இதுவரை அசீல், நிகோபாரி மற்றும் கடகநாத் என்னும் மூன்று வகை நாட்டுக்கோழி ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோழியினத்தில், மரபணு மூலம் மாற்றம் செய்து, கடகநாத் என்னும் கருப்பு நிறத்திலான கோழி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உடல், தோல், ரத்தம், பாகங்கள் என அனைத்துமே கருப்பு நிறத்தில் உள்ளது. இந்த வகை கோழிக்கறி விலை கிலோ 800 ரூபாயாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.

கோழி பண்ணையாளர்களுக்கும், கோழி வளர்ப்போருக்கும் அதிக கோழி குஞ்சுகளை வழங்கும் வகையில், 30 ஆயிரம் குஞ்சுகளை பொறிக்கும் வகையிலான புதிய இயந்திரங்கள், மாதவரம் கோழிப்பண்ணையில் நிறுவப்பட்டுள்ளது.இந்தியாவில் தலைசிறந்து விளங்கும் ஐந்து கோழியின ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றாக திகழும், மாதவரம் கோழியின ஆராய்ச்சி நிலையம், வரும் காலங்களில் பல்வேறு புதிய கோழியினங்களை உருவாக்கி சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி