தமிழ்நாடு

சுகாதாரத்துறையில் புதிதாக 5,224 பேர் நியமனம் - நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர்

சுகாதாரத்துறையில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுள் பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக முதலமைச்சர் பழனிசாமி 10 பேருக்கு பணி ஆணையை வழங்கினார்.

தந்தி டிவி
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, 2721 செவிலியர்கள், 1782 கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட மொத்தம் 5214 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு தொலைதூர கண்ணியல் வலைதளம் மற்றும் 32 கண் பரிசோதனை மையங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய நான்கு இடங்களில், அரசின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை