இதனிடையே, நெல்லையப்பர் கோயில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொலைபேசி எண்கள் பொறித்த டேக்கை, குழந்தைகள் கையில் கட்டி விட்டுள்ள போலீசார், இதன்மூலம், காணாமல் போகும் குழந்தைகளை உடனடியாக மீட்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், 15 ட்ரோன் கேமராக்கள் மூலம் தேரோட்டம் நடைபெறும் ரத வீதிகளை கண்காணிப்பதுடன், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற நிகழ்வுகளை தடுக்க, பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட தற்காலிக கண்காணிப்பு கேமராக்களையும், போலீசார் பொருத்தி உள்ளனர்.